• Dec 26 2024

கிழக்கு வாசலுக்கு குட் பாய்.. புதிய தொடரில் கமிட்டான சஞ்சீவ்! ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ள பிரபல சீரியல் நடிகை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ராதிகாவின் ராடான் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், விஜய் டிவி முதன்முறையாக ஒளிபரப்பாகிய சீரியல் தான் கிழக்கு வாசல். இந்த  தொடரில் சஞ்சீவ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க இருந்தார்கள். 

அத்துடன், இந்த தொடரின் மூலம் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார்.


தத்தெடுத்து வளர்க்கும் பெண் தன்னுடைய உறவினர்களால் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சீரியலில் முதலில் நாயகனாக நடிக்க சஞ்சீவ் தான் கமிட்டானார். ஆனால் அவர் சில காரணங்களால் வெளியேறியிருந்தார். 


இந்த நிலையில், அவர் நடிப்பில் வெளியாகவுள்ள புதிய சீரியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

அதன்படி, சஞ்சீவ் மற்றும் தாலாட்டு சீரியல் புகழ் ஸ்ருதி நடிப்பில், சன் டிவியில் புதிய தொடர் ஆரம்பமாகவுள்ளதாம். 

அதேவேளை, இவர்களின் கூட்டணியில், திருமதி செல்வம் சீரியல் புகழ் ரிந்தியாவும் நடிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement