• Dec 26 2024

கணவருக்கு கிடைத்த குட் நியூஸ்.. பக்தி பரவசத்தில் நயன்தாரா..! ட்ரெண்டாகும் போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் மட்டும் அல்லாமல் தனது குடும்பம், பிசினஸ் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நயனுக்கு கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடந்தது. இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இதனால் சில சர்ச்சைகளையும் எதிர்கொண்டார். பின் அதையெல்லாம் சமாளித்து தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.


நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இன்னுமொரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.

அதாவது, தனது காதல் கணவர் விக்னேஷ்  இயக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா ஹீரோவின் அக்கா ரோலில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது கணவருக்கு ஒரு வழியாக பட வாய்ப்பு ஒன்று கிடைத்த சந்தோஷத்தில், கோயிலில் பூஜை ஒன்றை செய்துள்ளனர் விக்னேஷ் - நயன் தம்பதியினர்.

இவ்வாறு  அவர்கள் இருவரும் பக்தி பரவசத்தில் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


Advertisement

Advertisement