தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு அறிமுகமானவர்தான் ஸ்ருதிஹாசன். இவர் நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் காணப்படுகின்றார். எனினும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிறிது காலம் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார்.
இதை தொடர்ந்து மீண்டும் கம்பேக் கொடுத்த ஸ்ருதிஹாசன் தனியாக ஆல்பம் பாடல்களை உருவாக்குவதிலும், பாடல்களை பாடுவதிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றார். இவரது குரலில் காதலிக்க நேரமில்லை படத்தின் பிரேக்கப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
d_i_a
அதேபோல பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இவர் நடித்திருந்த இனிமேல் ஆல்பம் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அஜித், சூர்யா, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இவருடைய நடிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படம் உருவாகி வருகின்றது. அதில் நாகார்ஜுனா, சத்தியராஜ் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டரில் நடிக்கின்றார்கள்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் தனக்கு தமிழ் சினிமாவில் சொல்லப்படும் கதைகள் பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.
மேலும் அவர் கூறுகையில், தனக்கு தமிழில் அழுத்தமான கதைகள் கிடைப்பதில்லை. அதனால் தான் தமிழில் நடிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். அத்துடன் கமலின் மகள் என்ற பெயரை தான் விரும்பவில்லை என்றும் தனக்கான சொந்த அடையாளம் வேண்டும் எனவும் அதற்காகத்தான் ஒரு பெயரை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!