பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் எப்போது வரும் யார் அதை எடுத்துக்கொண்டு வெளியே செல்வார் என்று ஒவ்வொரு சீசனும் ரசிகர்கள் ஆர்வமாக பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த சீசனில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு யார் உள்ளே வருவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசனில் பணப்பெட்டியை எடுத்தாலும் போட்டியை தொடரலாம் என்று அறிவிக்கப்படுகிறது. இதனால் டாப் 6 போட்டியாளர்களும் அதிரடியாக விளையாடுகிறார்கள். முத்து,விஷால், ரயான்,சவுந்தர்யா, பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி எடுக்கும் டாஸ்க்கில் வெற்றி பெற்ற நிலையில் இறுதியாக ஜாக்குலின் பணப்பெட்டியை எடுக்க போகிறார்.
இந்த முறை 8 லட்சம் பணப்பெட்டி 35 செக்கனில் எடுப்பதற்கு 80 மீட்டர் தூரத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஜாக்குலின் போவதற்கு தயாராகி அழுதுகொண்டு இருக்கிறார். இதனை கவனித்த பிக்பாஸ் ஜேக்குலின் ஏன் அழுக்குறீங்க என்று கேட்கிறார். அதற்கு ஜேக்குலின் " இந்த வீட்டை திரும்ப பார்க்க முடியாது என்று பயமாக இருக்கு என்று சொல்கிறார்".
பின்னர் மணி அடித்த உடன் ஓடிய ஜேக்குலின் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே வந்து விடுகிறார். ஆனால் பிக்பாஸ் இது ஒரு டைப் பினிஷ் முடிவுகள் பிறகு அறிவிக்கபடும் என்று சொல்கிறார். இதனால் ஜாக்குலின் குழப்பத்தில் இருக்கிறார். பிக்பாஸ் என்ன முடிவு சொல்வார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!