• Dec 25 2024

பாக்கியாவிடம் அபசகுணமாக பேசிய கோபி.. எமோஷனலாக செக் வைத்த ஈஸ்வரி! எதிர்பாராத திருப்பமாக ராதிகா செய்த காரியம்? பாக்கியலட்சுமியில் புதிய ட்விஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகியுள்ளது.

அதில், வீட்டிற்கு வந்த பாக்கியா அனைவரிடமும் தனக்கு  கவர்மென்ட் கான்ராக்ட் கிடைத்து விட்டதாக சொல்லி சந்தோசப்படுகிறார்.  அந்த நேரத்தில் கோபியும், ஈஸ்வரியும் மட்டும் பாக்கியாவை கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். மேலும் கவர்மென்ட் கான்ராக்ட் எடுக்க இன்னும் 50 ஆயிரம் பணம் கட்டணும் என சொல்ல, எனக்கு இதுல உடன்பாடு இல்ல என்று ஈஸ்வரி சொல்கிறார். கோபியும் நீ கை வைச்ச காரியம் எது நல்லா வந்து இருக்கு என பாக்கியாவை திட்ட, எழிலும் அவரது மாமனாரும் அவருக்கு சப்போர்ட்டா கதைக்கின்றனர். மேலும் பேங்க்கு போய் 50 ஆயிரம் பணத்தை எடுத்து பாக்கியாவுக்கு கொடுக்கிறார். எனினும் மீண்டும் பாக்கியாவை இந்த விஷயத்தில் திட்டிய ஈஸ்வரி கான்ராக்ட் விசயத்துல ஏதும் தல கீழா நடந்தா நான் உன்கூட பேசவே மாட்டன் என சொல்லுகிறார்.இதை தொடர்ந்து கோபியும் அபசகுணமாக பேசுகிறார்.


மறுபக்கம் கான்ராக்ட்டை கையில் எடுக்க பாக்கியா, எழில், பழனிச்சாமி ஆகியோர் காத்திருக்க, கான்ராக்ட் கொடுக்க வந்தவரிடம் அதனை செக் பண்ணி எடுக்கிறார்.இவ்வாறு ஒரு வழியாக கான்ராக்ட்டை கையில் எடுத்து விட்டார் பாக்கியா.

இதையடுத்து, வீட்டிற்கு சென்ற பாக்கியா, எழில், செல்வி, அமிர்தாவுடன் தன் சந்தோசத்தை பகிர்ந்து கொள்கிறார்.அந்த நேரத்தில் ராதிகா சமையல் அறைக்குள் வர, அக்கா இனி மேல் நாங்க சந்தோசமா வேல செய்யலாம்.. யாரும் குற சொல்ல ஏலாது என சொல்ல, எதிர்பாராத விதமாக பாக்கியாவுக்கு கை கொடுக்கிறார் ராதிகா. இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.




 


Advertisement

Advertisement