பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரியும் ராதிகாவும் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்க, அங்கு இனியா வருகின்றார். இதன்போது என்ன சத்தம் என்று கேட்க, தானும்அத்தையும் சும்மா பேசிக் கொண்டிருப்பதாக கதையை சமாளிக்கின்றார் ராதிகா. மேலும் ஈஸ்வரியை ரெஸ்ட் எடுக்குமாறு அனுப்பி வைக்கின்றார்.
அதன் பின்பு கோபியின் நண்பர் வீட்டிற்கு வருகின்றார். இதனால் பாக்கியா அவரை இருந்து சாப்பிட்டு விட்டுப் போகுமாறு சொல்லுகின்றார். மேலும் கோபியின் உடல் நலத்தை விசாரிக்க, தான் இங்கு சந்தோசமாக இருப்பதாக சொல்லுகின்றார். ஈஸ்வரையும் கோபி இங்கே இருப்பதால் தான் சந்தோசமாக இருக்கின்றான் என்று ராதிகாவுக்கு குத்து கதை கதைக்கின்றார்.
இதை தொடர்ந்து கோபி தனது நண்பரிடம் தான் இப்போது தான் பாக்யாவின் உண்மையான முகத்தை பார்ப்பதாகவும், எல்லோருடன் சந்தோஷமாக இருப்பதாகவும், பாக்கியாவின் திறமையை பார்த்து வியப்பதாகவும் அவரைப்பற்றி பெருமையாக கதைக்கின்றார். மேலும் ராதிகாவும் பாக்கியாவும் ரொம்ப நெருக்கமாய் இருப்பதாகவும் சொல்லுகின்றார்.
இதை அடுத்து எழில் வீட்டிற்கு வருகின்றார். அவர்களை இங்கேயே இருக்குமாறு கோபி சொல்லுகின்றார். ஆனாலும் எழில் படம் எடுத்து முடித்த பிறகு தான் வருவது பற்றி யோசிப்பேன் என்று சொல்லுகின்றார். அதன் பின்பு கோபியை எப்படி சமாளித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என பாக்கியாவிடம் எழில் கேட்க, எல்லாருமே அவர் இருப்பதால் சந்தோஷமாக இருக்கின்றார்கள். அவர்களுடைய சந்தோசத்தை கெடுக்க விரும்பவில்லை அதனால் தான் என்று சொல்லுகின்றார்.
இறுதியில் ராதிகா ரூமில் கோபமாக இருக்க, அங்கு வந்த கோபியிடம் உங்களுடைய நண்பரிடம் என்ன சொன்னீங்க? பாக்கியா, ராதிகாவுடன் சந்தோஷமாக இருக்கீங்களா? உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்குதா? மீண்டும் பாக்கியாவுடன் இணையும் எண்ணம் இருந்தால் நான் கிளம்பி சென்று விடுவேன் என்று கோபியை எச்சரித்து செல்லுகின்றார்.
Listen News!