விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மறுபடியும் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது அது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பணப்பெட்டி எடுக்க போவது யார் என்ற டாஸ்க்கின் அடிப்படையில் முதலில் முத்து பணப்பெட்டியை குறித்த நேரத்துக்குள் எடுத்து வந்து விடுகிறார். அதனை அடுத்து ரயான் அடுத்து வைக்கப்பட்ட பணப்பெட்டியை எடுத்துவைத்துள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகிய ப்ரோமோ குறித்து பார்ப்போம்.
இந்நிலையில் இந்த ப்ரோமோவில் 60 மீட்டர் தூரத்தில் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. முத்து, ரயான், விஷால் ஆகியோர் பணப்பெட்டியை எடுப்பதாக சொல்கிறார்கள். இறுதியில் விஷால் பணப்பெட்டியை எடுப்பதற்கு தயாராகிறார். முத்து மற்றும் ரயான் அவருக்கு அட்வைஸ் செய்கிறார்கள்.
அதனை அடுத்து மணி ஒலித்ததும் விஷால் வேகமாக ஓடுகிறார் அங்கே மூன்று பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பெட்டியை எடுக்கிறார் அது கீழே விழுந்து விடுகிறது பின்னர் அடுத்த பெட்டியை எடுத்த கொண்டு ஓடி வருகிறார். நேரம் நிறைவடைவதற்கு முன்னர் உள்ளே வந்து விட்டாரா என்று பார்பதற்குள் ப்ரோமோ முடிவடைகிறது.
Listen News!