ஜி.வி பிரகாஷின் விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு பேச்சுகள் எழுந்துள்ளன. இந்த சூழலில், நடிகை திவ்யா பாரதி, ஜி.வி பிரகாஷிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். “நான் ஒரு percentage கூட இதனை எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கிடையில் ஏதாவது இருந்திருந்தால் நாங்கள் யோசித்திருப்போம், ஆனால், எதுவும் இல்லாமல் இப்படி பேசுகிறார்கள்” அதுதான் கவலையாக உள்ளது என்றார்.
ஜி.வி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவியின் விவாகரத்து அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும், இருவரும் இணைந்து சமீபத்தில் பாடல் பாடி வெளியிட்டிருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜி.வி பிரகாஷ் அந்நிகழ்ச்சியில் தனது குழந்தையை ‘princess’ என்று அழைத்திருந்தார்.
அத்துடன் ஜி.வி பிரகாஷ், தற்போது ‘Good Bad Ugly’ எனும் புதிய படத்தில் இசையமைத்துள்ளார். இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “இந்த படம் மாஸான ஒரு அனுபவமாக இருப்பதுடன் , ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கும்” எனவும் ஜி.வி பிரகாஷ் உறுதியுடன் கூறியுள்ளார்.
ஜி.வி பிரகாஷ் விவாகரத்து தொடர்பாக பல்வேறு கருத்துகள் இருந்தாலும், அவர் தனது இசைப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறார். அந்த வகையில் இந்த நேர்காணல் ரசிகர்களுக்கு ஜி.வி பிரகாஷ் மீது உள்ள நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. அத்துடன் அஜித்துடன் இணையும் Good Bad Ugly அவரின் இசைப்பயணத்தில் முக்கியமான கட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!