ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.இப் படம் ஈரம் படத்தைப் போன்று பயங்கர திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இயக்குநர் தனது அறிமுக திரைப்பட ஹீரோ ஆதியுடன் மீண்டும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார். மற்றும் இவருடன் இணைந்து லட்சுமி மேனன்,சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரைலர் வெளியாகி ஒரு சில மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளதுடன் முதல் பாடலான 'மாயா மாயா' கடந்த வாரம் வெளியானது. மேலும் இப் படத்தை '7ஜி பிலிம்ஸ் சிவா' தயாரித்து 'ஆல்பா பிரேம்ஸ்' சார்பில் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இப்படம் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!