இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிங்ஸ்டன்'. இந்த படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம். இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவடைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதுகுறித்து தனது டுவிட் தளத்தில் புகைப்படம் பகிர்ந்துள்ளார். கிங்ஸ்டன் படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி தொடங்கி வைத்தார். கடல் பின்னணியில் திகில் சாகச படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கடலில் உள்ள மர்மத்தை கண்டறியும் மீனவரின் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பேச்சுலர் படத்திற்கு பிறகு திவ்யபாரதி ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது கிங்ஸ்டன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் சிவப்பு மின் வெளிச்சத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தினையும் ஷேர் செய்துள்ளார்.
Listen News!