இன்று நடைபெறவுள்ள பிக்பாஸ் சீசன் 8 இன் grand finale நிகழ்வுகள் ஒவ்வொன்றாக சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. 5 இறுதி போட்டியாளர்களுடன் நகர்ந்து கொண்டிருந்த இப்போட்டியில் வின்னர் ஆக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளார் தான் ஜாக்குலின்.
இவர் பணப்பெட்டி டாஸ்க்கில் பணப்பெட்டியை எடுத்தும் 2 விநாடிகள் தாமதமாகி வீட்டிற்குள் நுழைந்தமையினால் எலிமினேட் ஆகி வெளியேறியிருந்தார்.இவரது வெளியேற்றம் ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.அது மட்டுமல்லாமல் முத்துவிற்கு பிக்போஸ் விரித்த வலையில் ஜாக்குலின் மாட்டி கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும் இன்று நடைபெறவுள்ள இறுதி நிகழ்வில் ஜாக்குலினை மிகவும் விசேடமாக கௌரவிக்கவுள்ளதாகவும் அவருக்காக ஒரு ஸ்பெஷல் av ஒன்றினையும் பிக்போஸ் குழு தயாரித்து வருவதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல் இன்று வெளியாகியுள்ள grand finale ப்ரோமோ ஒன்றில் ஜாக்குலின் கையில் டம்மி கேடயத்துடன் வருவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
Listen News!