• Dec 25 2024

A.R ரகுமான் பகிர்ந்த ஹாஷ்டேக்.. பிரைவசி டிராமா நல்லாயிருக்கென கொந்தளிக்கும் ரசிகர்கள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமந்தா, தனுஷ், ஜி.வி  பிரகாஷ், ஜெயம் ரவி இவர்களைத் தொடர்ந்து தற்போது ஏ. ஆர் ரகுமானும் தனது மனைவியை பிரிந்துள்ளார்.

1992 ஆம் ஆண்டு ரோஜா படத்திற்கு இசையமைப்பு செய்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இசையமைப்பாளர் தான் ஏ. ஆர். ரகுமான். இவர் தான் இசை அமைத்த முதலாவது படத்திலேயே மிகப்பெரிய ஹிட் பெற்றார். அதன் பின்பு ஏ. ஆர் ரகுமான் உடைய  பாடல்கள் என்றாலே பாப்புலர் ஆனது.

2008 ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தின் மூலம் ஆஸ்கர் விருது வென்றார். ஆனாலும் அதற்குப் பிறகு ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெரிதாக ஏ. ஆர் ரகுமான் பெறவில்லை. இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். அந்தப் பாடலும் ஹிட்டாகியிருந்தது.


நேற்றைய தினம் ஏ. ஆர் ரகுமானின் மனைவி தனது விவாகரத்து அறிவிப்பை முதலில் வெளியிட்டு இருந்தார். இது தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு   அதிர்ச்சியாக காணப்படுகிறது. கிட்டதட்ட 29 ஆண்டுகள் ஒன்றாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்த இவர்களுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு விரிசல் ஏற்படும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

இந்த நிலையில், தனது மனைவி சாய்ரா பானுவின் அறிவிப்பை தொடர்ந்து ஏ. ஆர் ரகுமானும் ட்விட் போட்டு தனது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தங்களது பிரைவசியை ரசிகர்கள் மதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு  #arrsairaabreakup என்ற ஹேஸ்டெக்கையும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய பிரைவசி டிராமா நல்லா இருக்குது என வெளுத்து வாங்கி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement