சமீபத்தில் பாட்டில் ராதா படத்தின் விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் மிஷ்கின் பேசிய விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதில் குடிகாரர்கள் பற்றியும், புதிதாக நடிப்பவர்கள் பற்றியும் பெண்களின் ஆடை பற்றியும் அவர் பேசியது பலரின் கண்டனத்திற்கு உள்ளாகி இருந்தது.
பொதுவாகவே இயக்குநர் மிஷ்கின் பட விழாக்களில் கலந்து கொண்டால் அவருடைய சர்ச்சை பேச்சுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனாலும் அவருடைய பேச்சுக்களை யாரும் கண்டிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது.
d_i_a
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக காணப்படும் வாட்டர் மெலன் ஸ்டார் என தன்னைத் தானே கூறிக் கொள்ளும் திவாகர் மிஷ்கின் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆகணும் என வீடியோவை வெளியிட்டு உள்ளார். தற்போது இவர் மிஷ்கினை கண்டித்து விமர்சனம் பண்ணியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி அவர் கூறுகையில், பிரஸ் மீட்டில் அநாகரிக வார்த்தைகளை பேசிய மிஷ்கினை வன்மையாக கண்டிக்கின்றேன். நீங்க படிச்சு இருக்கீங்களா? இல்லையா? நாகரீகம்னா என்னனு தெரியுமா? அவர் என்ன பத்தி தப்பா பேசல.. ஆனா ஒரு இளைய தலைமுறை நடிக்க தெரியவில்லை என்று எப்படி பேசலாம்?
ஆனாலும் அவர் பேசியது தப்பு.. அவர் மன்னிப்பு கேட்டு ஆக வேண்டும்.. என் பின்னாடி தமிழ்நாடே இருக்கு. நீங்க ஊடகங்கள் முன்னாடி மன்னிப்பு கேட்டே ஆகணும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது திவாகரனின் இந்த பேச்சு இணையத்தில் ரெண்டாகியுள்ளது. ஏற்கனவே 3 திரைப்படத்தில் தனுஷ் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியை பிரபல நடிகர் சசிகுமாருக்கு நடித்துக் காட்டிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!