• Jan 22 2025

இரட்டிப்பு சந்தோஷத்தில் சுந்தர். சி கொடுத்த பார்ட்டி.. கும்மாளம் போட்ட போட்டோஸ் இதோ..

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

சினிமாவில் கமர்சியல் வெற்றி கொடுக்க பல இயக்குநர்களும் நடிகர்களும் போட்டி போட்டு வரும் நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜ ராஜாவின் மூலம் மாபெரும் வெற்றியை கண்டவர் தான் சுந்தர் சி. இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகின்றார்.

சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதகஜராஜா. இந்த படம் 2013 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாராக இருந்தது. ஆனாலும் நிதி நெருக்கடி காரணமாக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது.

d_i_a

பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் மதகஜராஜா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாக காணப்படுகின்றது. பிரபல இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது.


ஆனால் சுந்தர். சி , விஷால் கூட்டணியில் வெளியான மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இது பலருக்கும் வியப்பாகவே காணப்பட்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.


இந்த நிலையில், சுந்தர். சி நேற்றைய தினம் 21 ஆம் தேதி தனது 57 ஆவது பிறந்த நாளை கொண்டாடி உள்ளதோடு மத கஜ ராஜாவின் வெற்றி என இரட்டிப்பு மகிழ்ச்சியில் தனது திரைத்துறை நண்பர்களுக்கு விருந்தும் கொடுத்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.


இவ்வாறு சுந்தர் சி கொடுத்த பார்ட்டியில் நடிகை மீனா, விஷால், ஜோகி பாபு, திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கீதா என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.  


Advertisement

Advertisement