விஜய் டிவியின் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது திரைப்படங்களிலும் காமெடி நடிகராக கலக்கி வருபவர் தான் ரோபோ சங்கர். இவர் தற்போது கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவருடைய ஒரே மகள் இந்திரஜாவிற்கு கார்த்திக் என்பவரோடு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.
விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் இந்திரஜா. பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற இவருடைய கேரக்டர் பலராலும் ரசிக்கப்பட்டது. அதன் பின்பு பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய தாய் மாமனை திடீரென திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார்.
d_i_a
இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி பாதியிலேயே விலகினார். ஆனாலும் இந்திரஜாவிற்கு விஜய் டிவி மேடையிலேயே அவர் தாய்மை அடைந்ததற்கான சடங்குகளையும் செய்து அசத்தியிருந்தனர்.
சமீபத்தில் இந்திரஜாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பும் நடைபெற்றது. அதில் தனக்கு பேரன் பிறக்கப் போவதாக ரோபோ சங்கர் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தும் இருந்தார். ஆனால் ரோபோ சங்கரின் மனைவி இந்திரஜாவுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது . அவரும் குழந்தையும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது குழந்தையை முதன் முதலாக கையில் வாங்கிய கார்த்திக் எமோஷனலாகி அழுதுள்ளார்.
அவருடன் இந்திரஜாவின் மொத்த குடும்பமும் ஆனந்த கண்ணீரில் மூழ்கி உள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது.
Listen News!