• May 05 2025

"ரெட்ரோ " படத்தின் 3 ஆம் நாள் வசூல் விபரம் இதோ...

Mathumitha / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. கடந்த மே 1ம் தேதி சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "ரெட்ரோ" ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் Stone Bench Films மற்றும் 2D Entertainment ஆகிய நிறுவங்கள் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


திரைப்படம் வெளிவந்ததற்குப் பிறகு விமர்சன ரீதியாக சில எதிர்பாராத பின்னடைவை சந்தித்தாலும் "ரெட்ரோ" வசூல் விவரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி "ரெட்ரோ" திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் ₹68 கோடி வசூலைப் பெற்றுள்ளது. மேலும் படம் 65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இப்படத்தின் வசூல் வெற்றி மேலும் ரசிகர்களின் ஆதரவு படத்திற்கான வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. திரைப்படம் எதிர்பார்த்தவாறு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படக்குழு மற்றும் சூர்யா ரசிகர்களுக்கிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement