சீரியல் மற்றும் பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா, தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுனின் தேசமுதுரு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தனது இரண்டாம் திருமண நாளை கணவர் சோஹைல் கதுரியாவுடன் மாலைதீவில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்.
இருவரும் மாலைதீவில் கடற்கரையில் மகிழ்வது, அங்கு தனியார் தீவில் ரசிக்கும்படி எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "The island life" என தலைப்பிட்ட இந்த பதிவுகளில், பல்வேறு அழகான உடைகளை அணிந்த ஹன்சிகா மற்றும் சோஹைல் ஒருவருக்கு ஒருவர் கைகோர்த்து மகிழ்வது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்தக் காதல் முற்று விழாவிற்காக, ஹன்சிகா தனது ஸ்டைலிஷ் தோற்றத்துடன் பல்வேறு உடைகளைத் தேர்வு செய்துள்ளார். ஸ்கர்ட் மற்றும் கிராப் டாப், லெப்பர்ட் பிரிண்ட் ஆடைகள், டெனிம் ஷார்ட்ஸ் என அவருடைய விதவிதமான ஆடைகள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.புகைப்படங்கள் இதோ..
Listen News!