விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஒரு பிரபலமான ரியாலிட்டி ஷோவாக திகழ்கிறது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு, மக்கள் வாக்கெடுப்பின் மூலம் இறுதியில் ஒரு போட்டியாளர் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்களுக்கு பிரம்மாண்டமான அடையாளம் மற்றும் சினிமா வாய்ப்புகள் கிடைப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், விஜய் சேதுபதி போட்டியாளர்களை எப்படி சவால்களுக்கு முன் நிறுத்தி, அவர்கள் செயல்பாடுகளை திறம்பட விமர்சிக்கிறார் என்பதைக் காண முடிகிறது.
இதில் கோவா கேங்க் மட்டும் தனியா உட்க்காருங்க என சேதுபதி கூறியதற்கு ஜாக்குலின்,சவுண்டு,ஜெப்பிரி,ரயான்,ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து இருந்தனர்.இந்த கேங்க் பிக்பாஸினை எவ்வளவு பாதிக்கின்றது என கேட்டதற்கு சத்யா,மஞ்சரி,அருண் ஆகியோர் பேசிக்கா ஒரு ஜனா கூட்டம் மாதிரி தான் இருக்காங்க;ஒட்டு மொத்த வீட்டையும் பிக்பாஸ் ரூள்சினையும் அவமதிக்கிற மாதிரி இருக்கு ;கேமோட போக்கினையே கெடுக்குது என கூறியுள்ளனர்.
மாத்தி மாத்தி உங்கள விட்டு கொடுக்க தயாரா இருந்தா கதவை திறந்து விட சொல்கிறேன் வெளிய வாங்க என கூறி கார்டினை கோவமாக கிழித்து எறிந்துள்ளார்.இந்த குழு வெளியேறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
Listen News!