• Dec 25 2024

இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் இளம் நடிகர்... அச்சு அசல் அப்படியே சிவகார்த்திகேயன் போலவே இருக்காரே... வைரல் புகைப்படம் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாத்துறையில் கலக்கி வரும் ஒரு நடிகர். எந்த ஒரு இடத்திலும் இவர் என்ட்ரி கொடுத்துவிட்டார் என்றால், அந்த இடத்தில் என்டர்டைன்மெண்ட்டுக்கு பஞ்சமே இருக்காது. இப்படி இவர் போலவே இருக்கும் இளம் நடிகர் ஒருவரின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வலம் வருகிறது. 


சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி தொடர்ந்து நம்மை என்டர்டைன்மெண்ட் செய்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த மாவீரன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் ஒருவரை போல் உலகில் 7 பேர் இருப்பார்கள் என பலரும் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், அதை கண்முன் பார்ப்பது என்பது அரிது தான். சில சமயங்களில் ஒருவரை போல் மற்றொருவர் முக ஒற்றுமையுடன் இருப்பதையும் நாம் பார்த்து இருக்கிறோம். அப்படி ஷாக் கொடுக்கும் வகையில் தற்போது ஒரு விஷயம் நடந்துள்ளது.


நடிகர் சிவகார்த்திகேயனை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் இளம் நடிகர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் அசோக் செல்வனின் சபா நாயகன் படத்தில் அவருடைய நண்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் பார்த்த ரசிகர்கள் பலரும், இவரை பார்க்க நடிகர் சிவகார்த்திகேயனை பத்து வருடத்திற்கு முன் பார்ப்பது போலவே இருக்கிறது என கூறி இந்த புகைப்படத்தை ஸ்ப்ரே செய்து வருகிறார்கள். 

இதோ அவரின் புகைப்படம்..


Advertisement

Advertisement