• Dec 26 2024

நடிகர் விஜயகாந்த் உடனிலையில் முன்னேற்றம்... வெளியானது மருத்துவ அறிக்கை...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை தொடர்பான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. 


தே.மு.தி.க தலைவர் விஜகாந்த் கடந்த மாதம் 18ம் திகதி சென்னை தனியார் மருத்துவமனையில் சுவாச பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கபட்டது. கடந்த சில வாரங்களாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை என மருத்துவமனையினால் கடிதம் வெளியிடபட்டிருந்தது. 


இயற்கையாக சுவாசிப்பதற்கு அவர் சிரமப்பட்டதனாலே 24 மணித்தியாலயமும் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மருத்துவமணியினால் இன்னுமொரு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தலைவரின் உடல் நிலை தற்போது குணமடைந்து உள்ளதாகவும், அதனால் அவர் டிஸ்டேஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

Advertisement

Advertisement