சமீபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற அமீர் மற்றும் பாவனியின் திருமணம், இன்று சமூக வலைத்தளங்களிலும், ரசிகர்களிடையிலும் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. திருமண விழாவில் ஏற்பட்ட சந்தோசம் தற்பொழுது பெரும் பரபரப்பை இணையத்தில் உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் அமீரை வளர்த்த ஐஸு மற்றும் அவரது தந்தை அஸ்ரெப் பல கருத்துக்களை எழுப்பியுள்ளனர். இது ரசிகர்களிடையே பல சந்தேகங்களையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது. அமீர் தனது குடும்பத்தில் இருந்து தள்ளப்பட்ட ஒரு நிலையில, அவரை வாழ்வில் நிலைபெறச் செய்தது ஐஸு குடும்பம். அந்த குடும்பத்தினர் அமீரை தங்களின் பிள்ளையாகவே கருதி வளர்த்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால் பாவனியுடன் அமீர் இணைந்த பிறகு இந்த குடும்பத்தோடு பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஐஸுவின் தந்தை அஸ்ரெப், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கதையைப் பகிர்ந்தார். அதில் அவர் கூறியிருந்த வார்த்தைகள் வலிமையானதாக இருந்தன. அதன்போது அவர், "ஒரு நாயை பாத்திங்க என்றால் அதுக்கு சோறு குடுங்க தங்க இடம் கொடுங்க. அதே மாதிரி ஒருவன் பசியில இருந்தால் அவனுக்கு சோறு கொடுங்க ஆனா வீட்டுக்கு மட்டும் கூட்டிக் கொண்டு வராதீங்க. அப்படி கூட்டிட்டுப் போனால் உங்கட வாழ்க்கை நிம்மதியா இருக்காது. அதுக்கு உதாரணம் தான் நான் வாழுற வாழ்க்கை." என்று கூறியிருந்தார்.
இந்த வார்த்தைகள், நேரடியாக யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அமீரைக் குறித்துதான் என ரசிகர்கள் கணக்கெடுத்துள்ளனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவின் மூலம் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். அந்த வீடியோவில் அமீர் கூறியதாவது, “எனக்கும் ஐஸு குடும்பத்துக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவங்கதான் என்னை Unfollow பண்ணிட்டு போய்ட்டாங்க. நான் யாரையும் Unfollow பண்ணல. எனக்கு சப்போர்ட்டாக இருந்த குடும்பத்த நான் கண்டிப்பாக விட்டுக்கொடுக்க மாட்டேன்.” எனக் கூறியிருந்தார்.
Listen News!