தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஷ்ணு விஷாலும் ஒருவர். இவர் தமிழில் "வெண்ணிலா கபடிகுழு" என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த "லால் சலாம்" படம் தோல்வியைச் சந்தித்திருந்த நிலையில் தற்போது "இரண்டு வானம்,மோகன்தாஸ்" போன்ற படங்களில் கமிட்டாகியுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. தற்பொழுது இவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் .
இவர் ஆரம்பத்தில் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டு பின் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்தனர். இதனை அடுத்து ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் இன்று 4வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடும் அவர்களுக்கு இன்றைய தினம் பெண் குழந்தை பிறந்துள்ளதாக விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார் .
அதில் எங்களுக்கு "பெண் குழந்தை பிறந்துள்ளது ,ஆர்யன் இப்போது ஒரு மூத்த சகோதரர் ஆகிவிட்டார் . எங்களுக்கு 4வது திருமண ஆண்டு விழா அன்று இறைவனிடமிருந்து வந்த இந்தப் பரிசை நாங்கள் வரவேற்கின்றோம்" எனக் குறிப்பிட்டுள்ளார் . இத்தகவல் சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருவதுடன் அனைத்து ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!