பிரபல நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் தொடர்பான அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சீயான் விக்ரமின் 63வது திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை சாந்தி டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் டுவிட்டர் தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.
நடிகர் சீயான் விக்ரம் வேறுபட்ட கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடிப்பத்தில் பிரபலமானார். இவரின் நடிப்புக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்பட அப்டேட் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம், இயக்குநர் மாவீரன் அஷ்வின், தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோர் இருக்கிறார்கள்.
மேலும் தயாரிப்பு நிறுவனம் விடுத்த அறிக்கையில் சிறந்த நடிகரான சீயான் விக்ரமுடன் நாங்கள் இணைவது மகிழ்ச்சி, இது எங்களது 3வது தயாரிப்பு, மண்டேலாவையும் மாவீரனையும் தந்த இயக்குநர் அஷ்வின் இப்படத்தினை இயக்குகிறார். இரண்டாவது முறையாக அஷ்வினுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அருண் விஸ்வா சாந்தி டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வைரல் போஸ்ட்..
Extremely happy to announce our Production No.3 with @chiyaan sir for #Chiyaan63 ! Thank you for letting us to be a part of your incredible journey sir! Thrilled to announce my next film with the one and only @chiyaan Vikram sir, an actor par excellence and my all-time favorite! 🙌
It’s a pleasure to work with @madonneashwin for the second time! Looking forward to have yet another memorable experience!… pic.twitter.com/AUcq8VyWRb
Happy to join hands with @ShanthiTalkies & @iamarunviswa for the second time on this incredible journey. Can’t wait to bring this story to life!… pic.twitter.com/3O15bhTDiX
Listen News!