விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8ல் இந்த முறை 18 போட்டியாளர்கள் பங்கு பற்றி இருந்தனர். அதில் நடிகை பவித்ரா ஜனனியும் பங்குபற்றியுள்ளார். ரசிகர்கள், போட்டியாளர்கள் என பலரும் பல்வேறு கோணத்தில் இவரை விமர்சித்து வரும்நிலையில் அவருடன் சேர்ந்து நடித்த நடிகை ஷியாமந்தா கிரண்- பவித்ரா ஜனனி பிக் பாஸ் போனது தப்பு என்று கூறியதோடு மேலும் ஒரு சில விடையங்களையும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை ஷியாமந்தா கிரண் பிக் பாஸ் சென்றுள்ள நடிகை பவித்ரா ஜனனி பற்றி இவ்வாறு சில தகவல்களை கூறியுள்ளார். அதாவது "என்னுடைய தனிப்பட்ட எண்ணத்தின் அடிப்படியில் பவித்ராவின் குணத்திற்கு அவர் பிக் பாஸ் போனது தப்பு, ஆனா அவள் அங்க போனதுக்கு பிறகு தான் விளங்குது அவள் பிக் பாஸ் போனது சரி என்று.
அவள் அங்க கேம் விளையாட்டுல அவ இயல்பா எப்படி வெளிய இருந்தாலோ அப்படித்தான் இப்போ வரைக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கிறாள்" என்று கூறினார். மேலும் "இது தான் நான் உங்களுக்கு புரியாவிட்டால் பரவால்லை என்று தன்னோட கேம் பக்கவா விளையாடுகிறார்.
என்னை பொறுத்த வரைக்கும் அவள்தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக விளையாடுகின்றார் என்று ஷியாமந்தா கூறியுள்ளார். இந்நிலையில் பவித்ரா ஜனனி முன்னர் கதாநாயகியாக நடித்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ஷியாமந்தா கிரண் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!