• Dec 25 2024

மாரி செல்வராஜின் "வாழை" வளர்ந்ததா? டுவிட்டர் வாசிகளின் விமர்சனம் இதோ! vaazhai movie

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் வாழை. இன்று அனைத்து திரையரங்குகளிலும் ரிலீசாகி ரசிகர்களிடத்தில் நல்ல விமர்சனம் பெற்று வருகிறது.  திருநெல்வேலி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சிவனைந்தன், அவரின் நண்பர் சேகரை சுற்றியே கதை நகர்கிறது.


அம்மா மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார் சிவனைந்தன். பள்ளி இல்லாத நாட்களில் தன் நண்பன் சேகருடன் சேர்ந்து வாழைத்தார் சுமந்து சம்பாதிக்கிறார். பள்ளி இல்லை என்றால் சந்தோஷமாக விளையாடக் கூட முடியாத சூழல் அவருக்கு. மாரி செல்வராஜ் படங்களில் வரும் சாதிய பாகுபாடுகள் வாழை படத்திலும் இருக்கிறது. சீரியஸான காட்சிகளுக்கு இடையே சிவனைந்தன், சேகர் இடையே ரஜினி, கமல் தொடர்பாக ஏற்படும் விவாதம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.


படத்தின் பக்கபலமாக அமைந்திருக்கிறது இரண்டாம் பாதி. யாருமே எதிர்பார்க்காத ஒரு கிளைமேக்ஸ் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். கிளைமேக்ஸ் காட்சியில் கலங்காத கண்கள் இல்லை. அழகான அன்பான கிராமத்து டீச்சராக சிறப்பாக நடித்திருக்கிறார் நிகிலா விமல். கலையரசன், திவ்யா துரைசாமியின் நடிப்பு அருமை.  இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று டுவிட்டர் வாசிகள் விமர்சம் தெரிவித்துள்ளார் இதோ அவை..


Advertisement

Advertisement