• Dec 26 2024

கொட்டுக்காளியில் அரக்கனாகவே மாறினாரா நடிகர் சூரி..? குவியும் விமர்சனங்கள் இதோ...

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழங்கள் படத்தின் இயக்குனரான வினோத் ராஜ் இயக்கிய திரைப்படம் தான் கொட்டுக்காளி. இந்த படத்தில் நடிகர் சூரி, அன்னா பென்  ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர்கள் இல்லை.

கொட்டுக்காளி  திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதையும் வென்றது. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த நிலையில், கொட்டுக்காளி  திரைப்படம் பற்றி சிறப்பு காட்சிப்படுத்த திரையில் படத்தை பார்த்த  உலக பிரபலங்களும் நெட்டிசன்களும் தமது விமர்சனத்தை இணையத்தில் பதிவிட்டவாறு உள்ளார்கள்.

அதன்படி, கொட்டுக்காளி திரைப்படம் குடும்பம், சாதி, மதம் ஆகிய ஆணாதிக்க அமைப்புகள் காலம் காலமாய் பெண்ணுலகின் மீது நிகழ்த்தும் வன்மம், வக்கிரம் கயமைகளின் பெரும் பயணம் எனக் குறிப்பிட்டு முத்தங்கள் டா... வினோத் ராஜ். இப்படியான படைப்பை தயாரித்த சிவகார்த்திகேயன், அதில் நடித்த சூரி மற்றும் படக்குழுவினருக்கு கோடான நன்றி என மலை படத்தின் இயக்குனரான லெனின் பாரதி பாராட்டி உள்ளார்.


அதேபோல உடன்பிறப்பே படத்தின் இயக்குனரான இரா.சரவணன், கொட்டுக்காளி  பார்த்தேன் உலகத்தரம் அதே நேரம் உள்ளூரிலும் கொண்டாட கூடிய படமாக மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கூழங்கள் என்ற முதல் படைப்பிலேயே அணுகுண்டை வீசியத தம்பி பி.எஸ் வினோத் ராஜ் கொட்டுக் காளியில் பேசி இருப்பது அதைவிட பெரிய அரசியல். மேலும் மக்களின் நாடி பிடித்து படிப்படியாக முன்னேறிய கதாநாயகனாக சூரி, கொட்டிக் காளியில் நம்முடைய நாடித்துடிப்பாகவே மாறி உள்ளார். ஆண்களுக்குள் இருக்கும் அரக்கனாக மாறியுள்ளார். உங்களின் உச்சம் இது என கூறியுள்ளார்.

மேலும் நெட்டிசன் ஒருவர், கொட்டுக்காளி அற்புதமாக செதுக்கப்பட்ட படம். இது தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய மறக்க முடியாத படைப்பை கொடுத்த குழுவினருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

இன்னும் ஒருவர், இந்த படம் எவ்வளவு அருமையாக உள்ளது என்பதை விவரிக்க 280 எழுத்துக்கள் பத்தாது. இது வழக்கமான படம் அல்ல மெதுவான படம் தான் ஒரு வெளிப்படையான முடிவு இருக்கின்றது நம் அனைவரையும் யோசிக்க வைக்கும் இதுதான் இந்த ஆண்டின் சிறந்த படம் எனக் குறிப்பிட்டுள்ளார்.





Advertisement

Advertisement