• Feb 27 2025

"இனி விடுதலை போன்ற படம் உருவாகுமா?" - வெற்றிமாறன் கூறிய பதில் இதோ!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் யதார்த்தமான கதைக்களத்தால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், சமீபத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

"உடல் உழைப்பு, தத்துவம் மற்றும் அரசியல் போன்ற எல்லா விடயத்தையும் சேர்த்து நான் பண்ண சிறப்பான படம் தான் விடுதலை. இனி அப்படியொரு படம் பண்ண முடியுமா என்று தெரியலை" என அவர் கூறிய இந்த கருத்து, அவரது ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் பொல்லாதவன் , ஆடுகளம், விசாரணை, அசுரன் மற்றும் விடுதலை பகுதி 1 போன்ற வெற்றிப்படங்களை வழங்கினார். அவரது படங்கள் பெரும்பாலும் சமூக நீதியையும், அரசியல் வெளிப்பாடுகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.

அவரின் விடுதலை  திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளையும், தேசிய விருதுகளையும் பெற்றதால், தமிழ் சினிமாவின் தரத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியது. மேலும் வெற்றிமாறன் இந்த பேச்சு மூலம், தனது கடந்த சிறந்த படைப்புகளில் ஒன்று "விடுதலை" என்பதையும், அதே தரத்தை மீண்டும் உருவாக்குவது மிக கடினம் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.








Advertisement

Advertisement