மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கை வரலாற்றினை மையமாக வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ,சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் தான் அமரன்.
இப் படத்தின் 100 நாட்கள் வெற்றி கொண்டாட்டம் கூட நேற்று முன்தினம் இடம்பெற்றது. உண்மை கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தமையினால் இருவருக்கும் பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. அதிகம் கதாநாயகிக்கு முக்கியத்துவமளிக்கும் கதாபாத்திரங்களை சாய்பல்லவி தெரிவு செய்வது வழக்கம் அந்தவகையில் அமரன் படத்தின் பின்னர் இவர் தெலுங்கில் நடித்து சமீபத்தில் வெளியாகிய "தண்டேல்" திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நடிகை சாய்பல்லவி குறித்து " சாய் பல்லவியை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும்; அதுக்காக அவர் இந்த படத்தினை நடிப்பதற்கு ஒத்து கொள்ளவில்லை அவர் முதலில் script பார்த்தார்.பின்னர் தனக்கு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் இருக்கின்றதா என பார்த்த பின்னரே படம் நடிப்பதற்கு ok சொன்னார்.நான் மிகவும் கஷ்டமாக இருக்கும் என நினைத்த பகுதிகள் அவர் கூட சேர்ந்து பண்ணும் போது மிகவும் சுலபமாக மாறியது " என மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.
Listen News!