• Dec 26 2024

தேர்தலால் திணறும் தயாரிப்பாளர்கள்! ஒரே மாதத்தில் வெளியாகும் முக்கிய திரைப்படங்களின் பட்டியல் இதோ!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள்  பரபரப்பாக நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டு இருப்பதனாலும் , தேர்தல் திகதியில் திரைப்படங்களை வெளியிட முடியாது என்பதினாலும் , இதே மாதத்தில் ரம்ஜான் பண்டிகையும் வருவதினால் திரைப்படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிக்கல்கள் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் திகதிக்கு முன்னரும் பின்னருமாக தெரிவு செய்து குறித்த ஏப்ரல் மாதத்தில் பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது .


தேர்தலை முன்னிட்டு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளது. இதனால் சில சிறிய திரைப்படங்கள் தங்களது படங்களை இந்த மாதத்தில் வெளியிடுகிறது அந்த வரிசையில் சுந்தர்சியின் அரண்மனை பாகம் நான்கு , ஜிவி பிரகாஷின் டியர் மற்றும் கள்வன்  , விஜய் ஆண்டனியின் ரோமியோ  , விஷாலின் ரத்னம் போன்ற தமிழ் திரைப்படங்கள் இந்த மாதம் வெளியாகின்றது 


தொடர்ந்து குறித்த தேர்தலானது இந்திய அளவில் நடைபெறுவதனால் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி  என அனைத்து சினிமாக்களிலும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது அவ்வாறே இந்த மாதம் விஜய் தேவர் கோண்டாவின் பேமிலி ஸ்டார் , அஜய் தேவ்கனின் மைதான் , பகத் பாசிலின் ஆவேசம் போன்ற திரைப்படங்களும் குறித்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகின்றது.

Advertisement

Advertisement