• Dec 26 2024

பழைய பிரச்சினைகளை மீண்டும் கிளறிய ஈஸ்வரி.. அமிர்தா எடுத்த முடிவு! நக்கலடித்த கோபி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், கிச்சனில் பாக்கியா, எழில், அமிர்தா ஆகியோர் ஹோட்டல் கணக்கு வழக்கு பற்றி பார்த்து லாபம் வரவில்லை, போட்ட காசும் எடுக்க முடியவில்லை என பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு தண்ணீர் எடுக்க வந்த கோபி, இதெல்லாம் கேட்டு ஆனந்தம் கொள்கிறார்.

ஹோட்டல் பார்க்கிங் பிரச்சினை சரியானதும் எல்லாம் சரியாகிவிடும் என எழில் சொல்லிக் கொண்டிருக்க, கிச்சனுக்குள் வந்த கோபி தண்ணீர் பிடித்துக் கொண்டு பாக்கியாவுக்கு நக்கல் அடிக்கிறார். மேலும் தன்னுடைய பிசினஸ் ஆரம்பிச்ச நாளிலிருந்து இப்போ வரைக்கும் லாபம் பிச்சிக்கிட்டு போகுது என பீத்திக் கொள்கிறார்.  அதற்கு பாக்கியா அவருடைய செஃப் ஒரு நாள் லீவு போடும் அப்போ தெரியும் என சொல்கிறார்.

இதை தொடர்ந்து, செழியன் ஆஃபீஸ் கால் பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த ஜெனி யாருகிட்ட பேசுற, எங்க போக போற, நீ கண்டிப்பா போகணுமா? அந்த கிளைன்ட் ஆம்பளையா? பொம்பளையா? எனக் கேள்வி மேல் கேள்வியாக கேட்கிறார். 


அதற்கு செழியன், பழைய கிளைன்ட் ஆனா இன்னமும் காண்டாக்ட் தான் இருக்கார் என சொல்ல, அப்ப மாலினி கிட்டையும் பேசுறியா என்று கேட்கிறார். மேலும் போன் பாஸ்வேர்ட் கேட்டு செழியன் போனை செக் பண்ணுகிறார்.

இன்னொரு பக்கம் ஈஸ்வரி பாக்கியாவிடம் நீ எதுக்கு அமிர்தாவ ஹோட்டலுக்கு கூட்டிட்டு போற, வீட்டு வேலை எல்லாம் யார் பாத்துக்குவா? சீக்கிரம் நீயும் ஒரு குழந்தையை பெத்துக்கோ  என்று அமிர்தாவிடம் சொன்னது மட்டுமின்றி, கணேஷ் திரும்பி வந்து பிரச்சினை பண்ணா என்ன பண்றது என அமிர்தாவை  காயப்படுத்துகிறார். இதனால் அமிர்தா அழுது கொண்டே ரூம்க்கு  செல்கிறார்.

அதற்கு பாக்கியா, உங்கள் ஆசை சொல்றது தப்பு இல்ல அத்தை. ஆனா அவங்கள கட்டாயப்படுத்துறது தப்பு. அதுவும் கணேஷ் பத்தி பேசினது ரொம்ப தப்பு என சொல்ல, எனக்கு உன்ன மாதிரி பூசி மெழுக தெரியாது. நான் எதையும் வெளிப்படையாகத்தான் பேசுவேன் ஆனால் அதில் நியாயம் இருக்கும் என ஈஸ்வரி சொல்லுகிறார்.

ரூமுக்கு வந்த எழில் அமிர்தா டல்லா இருப்பதை பார்த்து என்ன ஆச்சு எனக் கேட்க, அவர் சமாளிக்கிறார். ஆனாலும் யாரும் ஏதும் சொன்னாங்களா என கேட்க, பாட்டி குழந்தை பெத்துக்க சொன்னாங்க என்று அமிர்தா சொல்கிறார். இப்போதைக்கு தான் நிலா இருக்காளே என்று சொல்ல, அதுக்கு அமிர்தா அவ உங்க குழந்தை இல்லையே என்று சொல்ல, பேச்சுக்கு கூட அப்படி சொல்லாத என எழில் கோபப்படுகிறார்.

ஆனாலும் நாம குழந்தை பெத்துக் கொள்ளலாம் என திரும்பவும் அமிர்தா சொல்ல, முதல்ல கேரியர்ல ஜெயிக்கணும். அதுக்கப்புறம் நமக்கு தேடும்போது பெத்துக்கலாம் என சொல்கிறார். மேலும்  வீக்கண்டில் வெளியே போகலாம் என பேசி அமிர்தாவை சிரிக்க  வைக்கிறார்.

Advertisement

Advertisement