தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சூரி. இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகி அதன் பின்னர் 'கருடன், கொட்டுக்காளி', 'விடுதலை பாகம் 2' ஆகிய படங்களில் நடித்து ஹீரோவாக ரசிகர்கள் மனதினை வென்றார்.
இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து, இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்கிறார்.இந்நிலையில் இவரை அடுத்த திரைப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி சூரியின் அடுத்த திரைப்படத்தினை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். மேலும், ஆர்சஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் மதிமாறன் தனது அதிகாரபூர்வமான டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது.
With sincere gratitude to my mentor #VetriMaaran sir, am very happy to announce my next directorial venture with beloved @sooriofficial sir produced by prestigious @rsinfotainment. heartful thanks @elredkumar sir for the trust and opportunity. thanks to entire team @mani_rsinfo
Listen News!