• Jan 13 2025

பிரபாஸ்க்கு விரைவில் திருமணம்! பொண்ணு யார் தெரியுமா! உளறிய ராம் சரண்

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் இவரின் திருமணம் குறித்து பிரபல நடிகர் அப்டேட் கொடுத்துள்ளார்.

பிரபாஷின் திருமணம் குறித்து அவ்வப்போது சில வதந்திகள் பரவி கொண்டுதான் வருகின்றன. இந்நிலையில், நடிகர் ராம் சரண் பிரபாஷின் திருமணம் பற்றி  சமீபத்தில் பேசியுள்ளார். நடிகர் ராம்சரண், 'கேம் சேஞ்ஜர்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகர் பாலகிருஷ்ணா நடத்தம் "அன்ஸ்டாப்பிள்' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பாலகிருஷ்ணா பிரபாஸின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.


அப்போது அதற்கு பதிலளித்த ராம்சரண், "பிரபாஷின் மனைவி ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி நகருக்கு அருகிலுள்ள கானபவரம் என்கிற ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம்" என்று கூறினார். இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து விரைவில் பிரபாஸின் திருமணத்திற்கான அறிவிப்பு வெளியானாலும் ஆகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். 


Advertisement

Advertisement