• Dec 25 2024

காலகேயனை மிஞ்சிய கார்த்திக்! கங்குவா’ படத்தில் லீக்கான மிரட்டல் புகைப்படம் இதோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகி இருக்கும் கங்குவா பேன் இந்தியா படமாக பல மொழிகளில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், போஸ் வெங்கட், கருணாஸ், கார்த்திக் போன்ற இன்னும் எண்ணற்ற நடிகர்கள் படத்தில் நடித்திருக்கின்றனர்.


கங்குவா படத்தில் பல டுவிஸ்டுகள் இருப்பதாக புரமோஷன்களில் படக்குழு பேசியிருந்தார்கள். இதனால் ஓரளவு சுமாரான விமர்சனங்கள் வந்தாலும் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கங்குவா திரைப்படம் நிச்சயமாக 2 ஆயிரம் கோடி வசூல் சாதனை பெறும் என்ற வகையில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்.

d_i_a 


இந்நிலையில் கங்குவா படத்தில் கார்த்தியும் நடிக்கிறார் என்ற ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது. அதை சிறுத்தை சிவாவிடமும் கேட்க அதற்கு சிறுத்தை சிவா தெரியவில்லை என்று கூறினார். இரண்டாம் பாகத்திலாவது கார்த்தி வருவாரா என்றும் கேட்க அதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பதில் அளித்து இருந்தார்.

Kanguva: Suriya starrer gears up for 3D trailer release, Audio Launch Tamil  Movie, Music Reviews and News

கங்குவா இன்று வெளியாகிய நிலையில் கார்த்தியின் ஒரு புகைப்படம்,மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கங்குவா படத்தில் அவருடைய கெட்டப் இதுதான் என படம் பார்த்த சில பேர் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான கெட்டப்பில் கார்த்தி இருப்பது அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி மற்றும் ரோலெக்ஷ் மோதல் கங்குவா பாகம் இரண்டில் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



Advertisement

Advertisement