• Dec 26 2024

கொடைக்கானலில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா கட்டிய பங்களா! கட்டுமானபணி நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டிய கட்டுமானம் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது என உயர் நீதிமன்றம் உத்தரவின் பெயரில் கட்டுமான பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 


உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு தரப்பில் தகவல் அடிப்படையில் கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டிய கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.


அனுமதியற்ற கட்டுமானம் மீது உள்ளூர் திட்டக்குழுமம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டியுள்ளனர் அனுமதி பெறாமல் பங்களா கட்ட பாறைகளை அகற்றியதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் என வழக்கு பதியப்பட்டு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement