• Apr 15 2025

ஹய்யோ, ஹய்யோ தேவையா இந்த STRESS’UU..! இயக்குநர் அட்லீயை பார்த்து கலாய்த்த சமந்தா..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சமந்தா அவர்கள் தனது அப்பாவின் இறப்பிற்கு பின்னர் அதிலிருந்து மீண்டு வருவதற்காக பல இடங்களுக்கு செல்கின்றார். மற்றும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.


அவரது முன்னாள் கணவர் நாகசைத்தன்யா அவர்களின் இரண்டாவது கல்யாணத்தின் போது மிகவும் உடைந்த அவர் தற்போது சோலோவாக எல்லா இடங்களிற்கும் சென்று வருகின்றார்.சினிமாவில் சாதித்த இவரால் வாழ்க்கையில் சாதிக்க முடியவில்லை எனும் கவலை ஒரு புறம் இருக்க தன்னை சுற்றியுள்ளவர்களை மகிழ்விக்க சமந்தா ஒருபோதும் தவறியதுமில்லை.


இந்நிலையில் தற்போது சமந்தா அட்லீ மற்றும் பிரியா அட்லீ ஆகிய இருவரையும் சந்தித்துள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.குறித்த வீடியோவில் அட்லீ மகனை மிகவும் ஆர்வத்தோடு கட்டிக்கொள்கின்றார்.அது மட்டுமல்லாமல் அனைவரும் இணைந்து போட்டோ எடுக்கும் போது சமந்தா அட்லீயை பார்த்து "ஹய்யோ, ஹய்யோ தேவையா இந்த STRESS’U " என சிரித்தபடி கலாய்த்துள்ளார்.


தெறி படத்திலிருந்து இருவருக்கும் இடையில் ஒரு நல்ல நட்பு இருந்து வருவதுடன் தற்போது இப் படத்தின் ரீமேக் படமான "பேபி ஜான் " பட வசூலில் அடி வாங்கியுள்ளமையினால் அட்லீ மிகவும் சோகத்தில் இருந்தார்.மற்றும் இப் படத்தில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷினை அறிமுகம் செய்ததும் சமந்தா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement