பீட்ஸா, விக்ரம் வேதா, விசுவாசம், தம்பி போன்ற வெற்றிப்படங்களின் எழுத்தாளரும் தற்போது வெளியான "குடும்பஸ்தன்" திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் கே. மணிகண்டன் தனது இயக்கத்தில் ஒரு புதிய படத்தை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு மிக முக்கியமான செய்தி என்னவென்றால் இவர் தனது நண்பர் விஜய் சேதுபதியுடன் பணியாற்றப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.சேதுபதியை நடிக்க வைப்பதற்காக அவரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்தால் அது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கவர்ச்சிகரமான கூட்டாக இருக்கும் என சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் படத்தின் தொடர் வளர்ச்சி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த தகவல்களுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Listen News!