• Dec 26 2024

அர்ச்சனா மீது வன்மத்தைக் கக்கும் Housemates.. எமோஷனலாக அடிவாங்கிய மாயா? பூர்ணிமாவின் அட்வைஸ் என்ன தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 வீட்டிற்கு தற்போது பழைய போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு ஜோக்கர் வேடம் போட்டு வந்த பூர்ணிமா, மீண்டும் மாயாவுடன் கூட்டு இணைந்துள்ளார்.

அதன்படி, பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பூர்ணிமாவிடம், மாயா அர்ச்சனா பற்றிய சில முக்கியமான தகவல்கள் சிலவற்றை பகிர்ந்து உள்ளார்.


அதேவேளை, தற்போது பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா, மாயாவோட நட்பை பெறுவதற்காக போராடி வருவதாக காட்டப்படுவதோடு, அர்ச்சனாவின் நட்பை  நம்பாமல் அவரின் பிரண்ட்ஷிப்பை தவிர்த்து வருகிறார் மாயா.


இதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா தனியாக பரிதாப நிலையில்  இருப்பதாக பிக் பாஸ் காட்சிகள் காட்டுகின்றது.

இவ்வாறான நிலையில், பூர்ணிமாவிடம் பேசிய மாயா, ஆரம்பத்தில் அர்ச்சனா எங்கள பார்த்து புல்லி  கேங் என்று தானே சொல்லிட்டு இருந்தாங்க. இப்போ என் கூட பிரண்ட்ஷிப்பா இருக்க நினைக்கிறாங்க. அவங்க நினைக்கிற மாதிரி என்னால நினைக்கவே முடியல. என்னால அவங்க கூட பிரண்ட்ஷிப்ப கண்டினியூ பண்ண முடியல என பூர்ணிமாவிடம் புலம்பியுள்ளார் மாயா.


இதேவேளை, அர்ச்சனா இதுவரையில் செய்த காரியங்களினால் ரொம்பவே நொந்து போனதாக புலம்பிய மாயாவிடம், உங்களுக்கு என்ன முடியுமோ அத பண்ணுங்க.. பாத்துக்கலாம் என நம்பிக்கை கொடுக்கிறார் பூர்ணிமா.

Advertisement

Advertisement