துணை நடிகரும் வில்வித்தை ஆசிரியருமான ஹுசைனி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் "பத்ரி" படத்தில் விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக சிறப்பாக நடித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது ஹுசைனி ஒரு முக்கிய பேட்டியில் 'நான் இன்னும் சில தினங்களில் இறந்துவிடுவேன் நடிகர் விஜய் என்னை வந்து பார்க்க வேண்டும் அவரிடம் பேச வேண்டும்' என கூறி இருந்தார். ஆனால் அவரது கடைசி நேரத்தில் விஜய் அவரை சந்திக்க வரவில்லை.
இதனால் ஹுசைனியின் கடைசிக் கோரிக்கை நிறைவேறவில்லை என்பதால் விஜய் குறித்து சில விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.இதனிடையே ஹுசைனி தனது வீட்டை தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு எழுதி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பவன் கல்யாண் ஹுசைனியிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹுசைனி தனது வீட்டை நினைவிடமாக மாற்றும்படி பவன் கல்யாணிடம் கோரியதாக கூறப்படுகிறது.
Listen News!