• Dec 26 2024

எனக்கும் காதலி இருந்தாங்க.. ஆனா...! தனது லவ் ஸ்டோரியை சொன்ன தனிக்காட்டு ராஜா எஸ்.ஜே. சூர்யா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் ஒரு நடிகர் மாத்திரமல்லாது இயக்குநராகவும் பட்டையை கிளப்பி வருகின்றார்.மேலும் இவர் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் இயல்பு கொண்டவராவார்.

இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வாலி மற்றும் குஷி ஆகிய படங்கள் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து அன்பே ஆருயிரே,மகாநடிகன்,கள்வனின் காதலி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். இருப்பினும் அவ்வளவு வெற்றி வாய்ப்பினை வழங்கவில்லை. இதனால் சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த சூர்யா மீண்டும் வில்லனாக நடிக்கத்தொடங்கினார். அவருடைய வில்லன் அவதாரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட ரோலாக விளங்குகின்றது.


இந்த நிலையில், 40 வயதுக்கு மேலாகியும் இன்னும் திருமணமாகாமல் தனிக்காட்டு ராஜாவாகத்தான் சுற்றி வருகிறார் எஸ்.ஜே சூர்யா.

ஆனால் ஒரு பேட்டியில் தன் காதல் கதையை கூறி உள்ள எஸ்.ஜே.சூர்யா,  தன்னுடைய உண்மையான லவ் ஸ்டோரியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 'அன்பே ஆருயிரே' படத்தை பாருங்க.. என சொல்லி இருந்தார்.

ஏனென்றால், அந்தப் படத்தில் எப்படி காதல் கதை அமைக்கப்பட்டிருக்கிறதோ அதே தான் அவர் வாழ்க்கையிலும் நடந்ததாம்.


அதன்படி, ஒரு நாள் இரவு விருந்தொன்றை அவருடைய காதலி ஏற்பாடு செய்ய, அதே நேரத்தில் பெரிய தயாரிப்பாளர் ஒருவர் படத்தை பற்றி பேச அவரை வரச் சொன்னாராம். இரவு விருந்திற்கு சென்ற எஸ்.ஜே.சூர்யா அவருடைய காதலியிடம் ஒரு அவசரமான வேலை இருக்கிறது என சொல்லிவிட்டு சென்று விட்டாராம்.

மீட்டிங் முடிந்து இரவு 12 மணிக்கு அவர் காதலியின் வீட்டை தட்டினாராம் எஸ்.ஜே சூர்யா. அதற்கு அவருடைய காதலி 'இது ஒன்றும் சத்திரம் இல்லை' என சொல்லிவிட்டு கதவை மூடிவிட்டாராம். இப்படி தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவமாக இதை பற்றி கூறியிருந்தார்.

Advertisement

Advertisement