• Dec 25 2024

திரிஷாவுக்காக 25 லட்சம் தாரேன்! சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பேன்! சொல்லவே அருவருப்பா இருக்கு! திரிஷா அதிரடி ட்வீட்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை திரிஷா பற்றி சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சையாக பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு திரிஷா கடும் கோபமாக பதிலடி கொடுத்த நிலையில் அவர் மன்னிப்பு கேட்டார். அதனால் மன்சூர் மீது சட்ட நடவடிக்கை எதுவும் திரிஷா எடுக்கவில்லை.


இந்நிலையில் நேற்று அதிமுக கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டியில் த்ரிஷா பற்றி மோசமாக பேசி இருந்தார். ஒரு எம் எல் ஏ த்ரிஷா தான் வேண்டும் என அடம்பிடித்ததாகவும், அதற்கு 25 லட்சம் தரப்பட்டதாகவும் அந்த நபர் பேட்டி கொடுத்திருக்கிறார்.


இந்த விடயம் தொடர்பில் நடிகர் சேரன் நடிகர்கள் பற்றி தவறாக பேசியதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கூறி டுவிட் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய நபருக்கு சினிமா துறையினர் பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.


இந்நிலையில் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக திரிஷா ட்விட்டரில் கோபமாக பதிவிட்டு இருக்கிறார். "பிரபலம் ஆக வேண்டும் என எந்த அளவுக்கும் கீழே இறங்குபவர்களை பார்க்க அருவருப்பாக இருக்கிறது.


நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி சொல்ல வேண்டியது அனைத்தையும் என் legal department-யிடம் இருந்து வரும்" என த்ரிஷா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

Advertisement

Advertisement