• Dec 26 2024

அழகுக்கே அழகு சேர்க்கும் அனுபாமா! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

அனுபமா பரமேஸ்வரன் மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்துவருபவர். நிவின்பாலி நடிப்பில் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் இவர் பிரபலமானார்.இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். 


சமீபத்தில் வெளிவந்த சைரன் படத்தி ஜெயம் ரவியின் மனைவியாக அனுபமா நடித்து இருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை அனுபமாவின் சொத்து விவரம் வெளியாகியுள்ளது.


இவர், ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூபாய் 1 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் இவர் ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ.40 முதல் 50 லட்சம் வரைசம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.


அதன் படி சினிமாவில் அறிமுகமான 9 ஆண்டுகளில் அனுபமாவுக்கு ரூ.35 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறதாம். அதுதவிர ஏராளமான சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பரமான வீடுகளும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

Advertisement