• Dec 26 2024

அப்படிப்பட்ட ஆள் நான் கிடையாது.! தனுஷை தான் சொன்னாரா எஸ்கே..?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நடிகராக மட்டுமே இல்லாமல் தயாரிப்பாளராகவும் காணப்படுகின்றார்.

சின்னத்திரை நட்சத்திரமாக ஜொலித்த சிவகார்த்திகேயன் தற்போது வெள்ளித் திரையில் மாஸ் நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்த ஹீரோவாகவும் கலக்கி வருகின்றார். ஆரம்பத்தில் விஜய் எப்படி சிறுவர்கள், ரசிகர்கள், குடும்பத்தினரை தன்னுடைய ரசிகர்களாக மாற்றினாரோ அதே பாணியில் சிவகார்த்திகேயனும் காணப்படுகின்றார். இதன் காரணமே இவர் அடுத்த தளபதி என பேசப்பட்டு வருகின்றார்.

ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் வளர்ச்சி அபாயகரமாக காணப்பட்டாலும் இன்னொரு பக்கம் அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்தவாறே காணப்படுகிறது. அதிலும் டி. இமான் முன்வைத்த குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் சிவகார்த்திகேயனை தனுஷ் 3 என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின்பு சிவகார்த்திகேயன் ஹீரோவாக மெரினா படத்தில் அறிமுகமானார். எதிர்நீச்சல்  படத்தையும் தனுஷ் தான் தயாரித்திருந்தார். இதன் காரணமாகவே இரண்டு பேருக்கும் இடையில் நட்பு காணப்பட்டது.


இந்த ஆண்டு பொங்கலுக்கு கேப்டன் மில்லர், அயலான் படம் வெளியானது. ஆனால் கேப்டன் மில்லரை விட அயலான்  படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்றது. இதனால் தனக்கு வாழ்க்கை கொடுத்த தனுசையே அடித்து காலி செய்து விட்டாரே சிவகார்த்திகேயன் என்று ஒரு பேச்சு எழுந்தது.

இந்த நிலையில், கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், நான் யாரையும் கண்டுபிடித்து இவருக்கு வாழ்க்கை கொடுத்து நான் தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கி விட்டார்கள். அப்படிப்பட்ட ஆள் நான் கிடையாது. ஏதோ என் நண்பர் இவர்தான் என்று அறிமுகம் செய்வோம் இல்லையா அப்படித்தான் இதனை நான் செய்கின்றேன். நீங்கள் கொடுத்த நடிகர் என்ற இடத்திலிருந்து அதை சரியாக செய்ய வேண்டும் நினைக்கின்றேன் என கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் தனுசை மறைமுகமாக தாக்கினாரா என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement