பிக்பாஸ் நிகழ்ச்சியின் புது ட்விஸ்ட்டாக இந்த சீசனில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்ற 8 போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று சுவாரஸ்யமானதாக காணப்படுகின்றது.
அதன்படி சுனிதா, வர்ஷினி, ரவீந்தர், ரியா, அர்னவ், தர்ஷா குப்தா, சாச்சனா, ஷிவக்குமார் ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளார்கள். மேலும் தற்போது உள்ளே நுழைந்த பழைய போட்டியாளர்களுக்கு இருவரை வெளியேற்றுவதற்கான அதிகாரத்தையும் பிக்பாஸ் கொடுத்துள்ளார். இதனால் போட்டி இன்னும் கடுமையாகியுள்ளது.
இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது அதில் சவுந்தர்யா " எனக்கு என்ன தோணுது என்றால் அவங்களுடைய கேமும்,கேரக்டரும் கலந்து இருக்கு அது எனக்கு செட்டாகாது" என்று சொல்கிறார். உடனே ஜேக்குலின் "எனக்கு என்ன தோணுதுன்னா அவங்களுக்கு நல்லா கேம் விளையாட தெரியுது எனக்கு தெரியல, கரெக்ட்டான இடத்துல கரெக்ட்டான பாய்ண்ட் சொல்லுறாங்க அது தான் கேம்" என்று சொல்கிறார்.
மேலும் சவுந்தர்யா " முதல்ல இங்க வந்து செஞ்ச தப்பு என்னனா பிரன்ஷிப் என்று ஒன்று வச்சிக்கிட்டது தான் தப்பு, நீங்க சேபா இருக்கிறீங்க நாங்க அப்படியில்லை என்று சொல்கிறார். கோபமடைந்த ஜேக்குலின் "ஒழுங்கா கேம் விளையாடுறதுனா விளையாட சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு கோபமாக எழுந்து செல்கிறார்.அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.
Listen News!