• Dec 26 2024

ஒரு சிலர தூக்கிவிடலாம்னு கை கொடுத்தேன்.. ஆனா அவங்க...? விஜய் சேதுபதி பற்றி விமல் பளீச் பேட்டி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் விமல். தற்போது விமல் நடித்துள்ள சார் படத்தின் டெய்லர் வெளியீட்டு விழா இன்றைய தினம் நடைபெற்றது.

ஒரு பள்ளிக்கூடம் பற்றிய கதை என்பதால் இந்த படத்திற்கு சார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட உள்ளார். மேலும் இதில் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டு இருந்தார்.

போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சரவணன், ஆடுகளம் ஜெயபாலன், சாயா கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியான நிலையில் தற்போது டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், சார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விமல், நடிகர் விஜய் சேதுபதி பற்றி பெருமையாக பேசி உள்ளார் தற்போது அவர் பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.


அந்த வகையில் அவர் கூறுகையில், நான் ஒரு கதாநாயகனாக இந்த இடத்தில் நிற்பதற்கு காரணம் விஜய் சேதுபதி தான். ஏனென்றால் பசங்க படத்தில் நான் மீனாட்சி சுந்தரம் என்ற கேரக்டரில் நடித்தேன். அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த வாய்ப்பை எனக்கு வாங்கிக் கொடுத்தது அண்ணன் விஜய் சேதுபதி தான். அவர் நடிகராக ஆவதற்கு முன்பே எனக்கு வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் தனக்கு விஜய் சேதுபதியும் வெற்றிமாறனும் கை கொடுத்து  தூக்கி விட்டார்கள். நானும் அவர்களைப் போலவே இரண்டு பேருக்கு கைகளை கொடுத்து தூக்கி விட நினைத்தேன். ஆனால் அவர்கள் எனது காலை வாரி விட்டார்கள் என்று சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement