• Dec 24 2024

15 நாளா வீட்டுல முடங்கி இருக்கன்.. என்னை பத்தி தப்பா பேசாதீங்க..! வேதனையில் அல்லு அர்ஜுன்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சுமார் இரண்டு வாரங்களிலேயே 1500 கோடிகளை வசூலித்து இருந்தது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான படம் தான் புஷ்பா. இந்த படத்தின் முதலாவது பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. இதற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து வெளியானது.

புஷ்பா படத்தின் நாயகன் ஆன அல்லு அர்ஜுன் இந்த படத்திற்காகவே மூன்று ஆண்டுகளும் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பலனாகவே தற்போது புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

எனினும் இந்த படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அதில் எதிர்பாராத விதமாக பெண் ஒருவர் சிக்கி உயிரிழந்ததோடு அவருடைய மகனும் மூளைச்சாவடைந்தார். இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


இந்த நிலையில், என்னைப் பற்றி தவறாக பேச வேண்டாம் பதினைந்து நாட்களாகவே நான் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

அதன்படி அவர் கூறுகையில், மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டு எடுத்த திரைப்படத்தை மக்களோடு சென்று பார்ப்பதற்கு கூட இயலாமல் 15 நாட்களாக வீட்டிலே முடங்கிக் கிடக்கின்றேன். 

இந்த துரதிஷ்ட வசமான சம்பவத்திற்கு வருந்துகின்றேன். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement