• Dec 27 2024

'ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறேன்..' அனிருத்தின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார். 

தற்போதைய காலத்திற்கு ஏற்ப இசையமைத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், அடுத்தடுத்து அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இப்போது தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்கு கூட இசையமைத்து உச்சம் தொட்டுள்ளார். அண்மையில் அனிருத் நடத்திய இசை கச்சேரிகள் நல்ல ஹிட்டடித்து.


தற்போது உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இது தவிர யூடியூப் பிரபலமான டிடிவாசனுடைய படத்திற்கும் இசையமையக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதன் காரணமாக அனிருத் இல்லாமல் சினிமாவில் அனுவும் அசையாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. 

இந்த நிலையில், சினிமாவிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கப்போவதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.


இதனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 

'மார்கழி சீசன் போன்ற இசை நிகழ்ச்சிகளை சிறு வயதில் இருந்தே பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களில் நிறைய படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். அதன் காரணமாக வரும் இரண்டு மாதங்களுக்கு ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறேன். அதன் பிறகு நிறைய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸாகும்' என்றார். 

Advertisement

Advertisement