• Dec 26 2024

சத்தியமா நான் இதெல்லாம் யோசிக்கவே இல்லை- நிக்சன் போட்ட எமோஷனல் பதிவு- திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. விரைவில் முடியவுள்ள இந்த ஷோவானது தற்பொழுது 13 வாரத்தை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது

கடந்த வாரம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து நிக்சன் மற்றும் ரவீனா ஆகியோர் வெளியேறியிருந்தனர்.இவர்கள் இருவரின் வெளியேற்றமும் ரசிகர்களிடம் மகிழ்ச்சியைத் தான் ஏற்படுத்தியுள்ளது.


முதலில் வினுஷா அடுத்து ஐஸ்வர்யா கடைசியாக பூர்ணிமா என பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் நிக்சன்.இந்த நிலையில் ஷோவிலிருந்து வெளியேறிய நிக்சன் தன்னுடைய இ்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினைப் போட்டுள்ளார்.அதாவது

இப்போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ள நிக்சன் தனது இன்ஸ்டாவில், இப்போதுதான் எல்லாவற்றையும் பார்த்தேன், எதிர்ப்பார்க்காத எல்லாத்தையும் எதிர்ல பாத்தது என்ன பீல்.எவ்ளோ சப்போர்ட், எவ்ளோ லவ், இவ்ளோ பேருக்கு என்னை புடிச்சிருக்குன்னு உள்ள இருக்க வரைக்கும் எனக்கு தெரியல.

ஒருவேளை தெரிஞ்சிருந்தா இன்னும் Effort போட்டிருப்பனோ? ச்ச, அதெல்லாம் யோசிக்கவே இல்ல, என்ன மன்னிச்சுடுங்க’ என்று பதிவிட்டுள்ளார்.


ஆனால் அவரின் பதிவை கண்ட ரசிகர்கள் சப்போர்ட்டா, லவ்வா அதெல்லாம் ஒன்றும் இல்லை எனத் திட்டித் தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement