• Dec 27 2024

23 வருசத்துக்கு பிறகு அவர் என்னை பார்த்ததும் இது தான் கேட்டார்- தளபதி 68 பற்றி சொன்ன நடிகை சினேகா

stella / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக நடித்து வரும் சினேகா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்அப்போது  விஜய் குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது ரொம்ப சந்தோசம். 23 வருசத்திற்கு பிறகு மீண்டும் சேர்ந்திருக்கிறோம். மேலும் ஷுட்டிங்கில் முதல் நாள் அவரை பார்த்ததுமே எப்பிடி இருந்த மாதிரியே இருக்கிறீங்க என்று கேட்டேன். அவரும் என்கிட்ட அது தான் கேட்டாரு. அவருக்கு ரசிகர்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்.


தளபதி 68 படத்திலிருந்து இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க தளபதி ரொம்ப நல்லா இருக்கின்றார் என்றும் அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement