• Dec 25 2024

நான் ரகடா தெரியுற சொக்லைட் பேபி... நாம சொன்னா காமெடி அவங்க சொன்னா சீரியஸ்... என் மனைவி இப்படி சொல்லிவிட்டார்.... 2026ல் நான்தான் முதலமைச்சர்- நடிகர் சரத்குமார்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ச. ம. க தலைவரும் பிரபல நடிகரான சரத்குமார் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மேடையில் பேசும் போது என் மனைவி இப்படி சொல்லிவிட்டார் அதனால் நான் 2026ல் முதலமைச்சர் ஆகுவேன் கூறியிருக்கிறார். 


தமிழ் சினிமா திரையுலகில் பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் சரத்குமார் தற்போது தனக்கு முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதாக பேசி இருக்கிறார். அதாவது  "2026  ஆம் ஆண்டு நான் கட்டாயம் முதலமைச்சர் ஆவேன் என்று என் மனைவி கூறுகிறார். என் மனைவியின் தாயாருக்கு 85 வயது மாப்ளே நீங்க சி.எம்.ஆகுறதை நான் பாக்கனும்'  என்று என் மாமியாரும் கூறுகிறார். நான் ஏன் முதலமைச்சர் ஆகக்கூடாது? நான் சீரியஸாக கேட்கிறேன். எனக்கும் முதலைச்சர் ஆசை வந்துவிட்டது என பத்திரிக்கையாளர்கள் போட்டுக்கொள்ளலாம். 


உங்களுக்கு வந்தா எனக்கும் வரும், யார் யாருக்கோ வரலாமா எனக்கு வரக்கூடாதாம் எனக்கு வந்தா மட்டும் காமெடியாம் மத்தவங்களுக்கு வந்தா சீரியசாம். ஆனா நான் காமெடியா பேசுறேன்னு நினைக்காதீங்க ரொம்ப சீரியசானவன் நான், ஒரு நாள் என்னிடம் கேட்டாங்க நீக்க சொக்லைட் பேபியா ரகட் பேபியானு நான் சொன்னன் ரகடா தெரியுற சொக்லைட் பேபினு. மனசு சுத்தம் நானும் முதலமைச்சர் ஆகுவேன் என பேசி முடித்திருக்கிறார். 

Advertisement

Advertisement