• Dec 26 2024

விஜயகாந்தின் கோபம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்! தப்புன்னு தெரிஞ்சா இறங்கி வந்து அடிப்பாரு.. நினைவேந்தல் விழாவில் கமல் உருக்கம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தேமுதிக கட்சித் தலைவருமான விஜயகாந்த, கடந்த மாதம் 28ம் திகதி உடல் நலக் குறைவால் அவதியுற்று, இறுதியில் இறைவனடி சேர்ந்தார்.

அவரது மறைவுக்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள், தொண்டர்கள், தமிழக மக்கள் என ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் சிந்தியது. 


இந்த நிலையில், இன்றைய தினம் ஜனவரி 19ம் திகதி காமராஜர் அரங்கில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு நினைவேந்தல் விழா நடைபெற்றது.

இதில், சினிமா பிரபலங்கள் மற்றும் விஜயகாந்தின் மகன்கள் சூழ நடைபெற்ற நினைவேந்தல் விழாவில் கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.


இந்த விழாவில் கலந்து கொண்ட கமல் பேசும் போது,  நடிகர் விஜயகாந்த் யாருக்கும் பயப்பட மாட்டார். அவரது நேர்மையான கோபம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். யாராவது தப்பு செஞ்சா இறங்கி வந்து தைரியமா கேள்வி கேட்பார். 

இன்னைக்கும் கிராமத்து ஆள் மாதிரி கோவம் வந்துடுச்சுன்னா கேட்ருவாரு.. அது எந்த அரங்கமா இருந்தாலும் பயப்படவே மாட்டார். அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்துக்கே உதவியாய் இருந்திருக்கு என கமல் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். 


Advertisement

Advertisement